தலைப்பு இன்னும் வைக்கவில்லை

வேகமாய் வந்த ரயிலும்
தடம்புரண்டு தட தடக்கிறது
பாய்ந்து வந்த பேருந்தும்
தலை குப்புற கவிழ்ந்து கிடக்கிறது
அவ்வப்போது ஹெலிகாப்டரும்
வட்டமடிக்கிறது.
பிறகு,

யானைக்கும்
மயிலுக்கும் சண்டை
புலிக்குட்டிக்கும்
ஆட்டுக்குட்டிக்கும் சண்டை
குதிரைக்கும்
சிங்கத்திற்கும் சண்டை
பிறகு,

என்ன நினைத்தாளோ தெரியவில்லை
எனை வந்து கட்டிக்கொண்டாள்
என் குட்டித் தேவதை.

யானையும்
மயிலும்
புலிக்குட்டியும்
ஆட்டுக்குட்டியும்
குதிரையும்
சிங்கமும்
எனை முறைத்துவிட்டு
திரும்பி படுத்துக்கொன்டன ...!!

எழுதியவர் : தர்மராஜ் (12-May-15, 11:23 pm)
பார்வை : 510

மேலே