இனியொரு தத்துவம்

மனிதர்களே...எம் மனிதர்களே....

எந்த வயிற்றில் அடித்தேனும் உங்கள் வயிற்றை நிரப்புங்கள்...
எவர் கனவை எரித்தேனும் உங்கள் இருளை நீக்குங்கள்..
எவர் வாழ்வை பறித்தேனும் உம் வங்கிக்கணக்கில் சேருங்கள்...
எத்தனை இதயம் நசிந்தால் என்ன? ஓடிக்கொண்டே இருங்கள்..!
எந்த ஓலம் இசைந்தால் என்ன?
பிறர் உயிர் பிதுங்கும்
ஓசையை ஒழித்துவிடும்
உம் பேராசைச்சங்கு
ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்..!

மனிதர்கள் வாழவே இடமில்லை, இதில் புல்,செடி,தாவரமா?
எவ்வளவு பெரிய பாவம்...
அகற்றுங்கள் அத்தனையும்...

அணுவுலைக்கே இடமில்லை..
இதில் விலங்குக்கும் மரத்துக்கும் கானகமா??!
ம்ம்ம்ம்.... இன்னும் வேகமாய் களவாடுங்கள் காடுகளை..!

எத்தனை கொழுப்பு இந்த விலங்குகளுக்கு..!
அதன் குருதியும் கொழுப்பும் செழித்து வேளான்மை விளையுங்கள்...

அதோ அங்கே ஓர் கற்பழிப்புச்சத்தம் கேட்கிறது..
உயர்த்திக்கொள்ளுங்கள் உங்கள்
தொலைக்காட்சியின் ஒலியளவை...

இதோ..
இங்கே ஒரு பிட்சைக்காரன் தூங்கிக்கொண்டிருக்கிறான்..
அவன் திருவோட்டில் கிடப்பதை திருடிக்கொள்ளுங்கள்...

யாரோ ஒரு முதியவர் தள்ளாடுகிறார்..
அவரிடம் கொஞ்சம் நயமாக பேசிக் கொன்றுவிடுங்கள்..

பிணங்கழுத்து மாலையை திருடிச்சென்று
உம் கோவில் தெய்வங்களை அர்ச்சித்து
வேண்டும்வரம் கேளுங்கள்..!

இருட்டுத்தட்டுப்படுவதாய் தெரிகிறது.
ஏதாவது இளம்பெண் கிடைத்தால்
அவளின் அந்தரங்கம் தீண்டுங்கள்..
அவளின் சம்மதம் ஒன்றும் தேவையில்லை...

நீண்டநேரமாய் ஒரு ஆண்மகன்
தெருமுனையில் நிற்கிறான்…
எங்கே இந்த விபச்சாரிகளை காணவில்லை?? ...
ஓஒ.... அரசியல்வாதி ஆகிவிட்டார்களா?!
சரி.. சரி...
வறுமையில் சமைந்த
வளம்பெண்னை கண்டுபிடித்து
விபச்சாரம் செய்ய சொல்லுங்கள்...

அது ஏன் வறும்மையில் சமைந்த பெண்?
பணம்படைத்த விபச்சாரம்
இன்று நாகரீகமாகிவிட்டது...!

இங்கே ஒரு பெண் விலைமகன் கேட்கின்றாள்....
என்ன செய்யலாம்?...
அவளை அரசுத்துறை அலுவலகம்
செல்லச் சொல்லுங்கள்
அங்குதான் விலைபோகும் ஆண்கள்
உடனே கிடைப்பார்கள்....

எங்கேயோ இன அழிப்பு நடப்பதாய் தகவல்..
எங்கென்று கண்டுபிடித்து உடனே செல்லுங்கள்...
இலவசப்புணர்வு அங்கு எளிதாய் கிடடைக்கும்...

இதென்ன்ன நமைச்சல். .
திடீரென மானம் வந்த சிலபேர் துள்ளுகிறார்கள்...

விஞ்ஞானிகளே ....
உங்களின் வேற்றுகிரக ஆராய்ச்சி விரையட்டும்..
மானம் வந்த ஈனர்களை அங்கு தொலைத்துவிடலாம்.
ஒருநிமிடம்…
யாராவது ஏன் செய்கிறீர் இதெல்லாம்?
என்று கேட்டால் இப்படி சொல்லலுங்கள்...
"யாதும் ஓரே யாவரும் கேளீர்” !

எழுதியவர் : விவேக் (12-May-15, 11:06 pm)
சேர்த்தது : Vivek Saamurai
Tanglish : iniyoru thaththuvam
பார்வை : 93

மேலே