பண்புடைய நற்செவிலி யர் - ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்

வெண்ணிற ஆடையினர் வெள்ளையுள்ளம் கொண்டோரே
பண்புநிறை நற்செவிலி யர்! 1

மென்மையில் அன்னையாய் மேதினியில் ஆர்வமாய்க்
புன்னகைத்துக் காப்பாள் பரிந்து! 2

நோய்தீர்ந்து வீட்டிற்கு நீபோகும் போதன்பு
தாய்போல் தருவாள் கனிந்து! 3

செவிலியர் அன்பும் சிறந்த கனிவும்
புவியிலது மானுடப் பண்பு! 4

பண்புடைய நற்செவிலி யர்தேவை என்றுமே
திண்மையாம் அன்பும் கலந்து! 5

பண்ணோ(டு) இயைந்தது பாடல் செவிலியர்
கண்ணோ(டு) இயைந்த கனிவு! 6

உள்விழிலென் ஸைப்பொருத்தும் எங்கள் பயிற்சியில்
எள்ளாய் செவிலியர் உண்டு! 7

எள்ளாய் - சுறுசுறுப்பாய்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-15, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

மேலே