Vivek Saamurai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vivek Saamurai
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2014
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  7

என் படைப்புகள்
Vivek Saamurai செய்திகள்
Vivek Saamurai - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2015 11:06 pm

மனிதர்களே...எம் மனிதர்களே....

எந்த வயிற்றில் அடித்தேனும் உங்கள் வயிற்றை நிரப்புங்கள்...
எவர் கனவை எரித்தேனும் உங்கள் இருளை நீக்குங்கள்..
எவர் வாழ்வை பறித்தேனும் உம் வங்கிக்கணக்கில் சேருங்கள்...
எத்தனை இதயம் நசிந்தால் என்ன? ஓடிக்கொண்டே இருங்கள்..!
எந்த ஓலம் இசைந்தால் என்ன?
பிறர் உயிர் பிதுங்கும்
ஓசையை ஒழித்துவிடும்
உம் பேராசைச்சங்கு
ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்..!

மனிதர்கள் வாழவே இடமில்லை, இதில் புல்,செடி,தாவரமா?
எவ்வளவு பெரிய பாவம்...
அகற்றுங்கள் அத்தனையும்...

அணுவுலைக்கே இடமில்லை..
இதில் விலங்குக்கும் மரத்துக்கும் கானகமா??!
ம்ம்ம்ம்.... இன்னும் வேகமாய் களவாடுங்கள் காடுகளை

மேலும்

Vivek Saamurai - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2015 10:18 pm

(தற்கொலை செய்யப்பட்ட(?!) பொறியாளர் முத்துகுமரசாமி அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பனம். )

எங்கள் ஈரலை எரிமூட்டி
உலை வையுங்கள்

எங்கள் கண்களைத் தோண்டியெடுத்து
உங்கள் பரத்தையர் வீட்டில் இரவு விளக்கென
மாட்டுங்கள்

எங்கள் கை கால் பிண்டங்கள்
உங்கள் அரசியல் நிகழ்வுகளுக்கு
அலங்காரத் தோரணமாகட்டும்

எங்கள் பிராணனின் உயிர்சுவாசம்
உங்கள் நியான் விளக்கின்
அடைபொருளாகட்டும்

உங்கள் பண்ணை வீட்டுத்தோட்டத்தில்
எம் பச்சையும் குருதியும்
பாசனம் செய்யட்டும்

எம் உயிர்கசியும் கண்ணீர்
உங்கள் வாகன சூட்டுக்கு
இதம் தரட்டும்

எம் லட்சியங்களின் கதறல்
உம் இன்னிசை கூட்டுப்பெருக்கியில்
ஒலிந

மேலும்

Vivek Saamurai - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 11:12 pm

தனிமை என்னும்
மெய்க்கண்ணாடியின் முன்
என்னை தரிசிக்க எத்தனித்தேன்.

எப்போதும் உளறிக்கொண்டிருக்கும்
உள்ளத்தை
'கொஞ்சம் ஊமையாய் இரு'
என சாபமிட்டது
மனசாட்சி எனும் தெய்வம்.

இரண்டாம் உயிரான
இசையையும் துண்டித்துவிட்டேன்.

எப்போதும் கல்லெறிந்து கொண்டேயிருக்கும்
அறிவின் கரங்கள்
துள்ளகூட முடியாதபடி
கட்டப்பட்டு கிடக்கின்றன.

கண் விழித்தேயிருக்கிறது.
உள்வாங்கவில்லை.

செவி திறந்தேயிருக்கிறது.
ஒலி மடுக்கவில்லை.

உயிர்த்தும் விழித்தும் இருந்தேன்.
உலகியல் தொடர்புகள்
ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டன.

இது உயிர்த்தீயில்
மௌனதீபமிடும்
தியான வேள்வியல்ல...

உள்ளாற்றலை உசுப்பித் தூண்டிவிடும்

மேலும்

Vivek Saamurai - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 9:24 pm

என்னவளே..
நீ வீசியெறிந்த
கந்தகச் சொற்களில்
என் இரத்தக்குளமே தீப்பிடித்துவிட்டது!
இனி உன் கண்ணீர் சொட்டா வந்து
அதை காபந்து செய்யப்போகிறது?

என் கவிதைத்தோட்டமே கருகிவிட்டது!
இனி உன் அஞ்சலிப் பூவா
அதை அலங்கரிக்கப்போகிறது ?

என் செவிகள் இரண்டுமே
செத்துவிட்டன!
இனி எந்த புல்லாங்குழல்
இசைத்தால் எனக்கென்ன?

என் தபோவனமே தரிசாகிவிட்டது !
இனி எங்கு புதர்ச்செடி
முளைவிட்டால் எனக்கென்ன?
*
எத்தனை எத்தனை வலிகளை
நான் ஏந்திச் சுமந்திருப்பேன்.

தெரியுமா உனக்கு?

உன் ஓரவிழிப்பார்வை- என் அடி வயிற்றில் திடீர் யுத்தம்!

காற்றிலாடும் உன் கூந்தல் -
நின்றே போய்விடும் சில வினாடிகள் இரத்த ஓட்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே