என்ன நேரமாக இருக்கும்

நல்ல நேரம்பார்த்து
ஜாதகம் பார்த்து...

நல்ல நேரம்பார்த்து
பெண் பார்த்து...

நல்ல நேரம்பார்த்து
தாலி கட்டி...

நல்ல நேரம்பார்த்து
முதலிரவை முடித்து...

நல்ல நேரம்பார்த்து
விருந்து வைத்து...

நல்ல நேரம்பார்த்து
தேனிலவு சுற்றி...

நல்ல நேரம்பார்த்து
அறுவைசிகிச்சையில் குழந்தைப் பெற்று...
.
.
.
.
.
விவாகரத்து கேட்டு
மனு அனுப்பும்போது
என்ன நேரமாக இருக்கும்?

எழுதியவர் : ஜின்னா (29-Nov-15, 1:19 pm)
பார்வை : 434

மேலே