இதயத்தில் கொள்வோம் இதனை நாமும்

அன்பெனும் குணம் அகிலத்தில் உண்டு
அதுவும் சிதைகிறது ஆயுதங் கொண்டு !
மனமும் உடைகிறது அதனைக் கண்டு
மண்ணும் அழுகிறது மனிதம் இழந்து !

பறவை இனமோ உறவோடு பழகுது
பார்க்கும் விழியோ உணர்ந்து அழுது !
பேசாத உயிரினம் உள்ளத்தால் சேருது
பேசிடும் மானிடம் பிரிவினை பேசுது !

நிஜத்தை மறந்து நிழலை வெறுக்கிறான்
நிறத்தைப் பார்த்து நிலத்தில் மோதுகிறான் !
இரக்கம் துறந்து இனத்தையும் பிரிக்கிறான்
இறுக்கம் தாங்காது இன்னுயிர் இழக்கிறான் !

அன்பின்றி இருந்தால் பண்பும் பழுதாகும்
ஆசையின்றி வாழ்ந்தால் ஆயுளும் நீளும் !
இதயத்தில் கொள்வோம் இதனை நாமும்
ஈரடி குறளாய் இணைந்தே வாழ்வோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Nov-15, 9:06 am)
பார்வை : 76

மேலே