ஏனிந்த வெளிநாடு -முஹம்மத் ஸர்பான்

ஆயிரம் தேடி ஜீவன் போக
அன்பினின் காயம் நெஞ்சினிலில்...,
கற்றவன் போறான் வாழ்வை
அழிக்க,கல்லாதவான் போறான்
வாழ்வை தேடி....,

வழி அனுப்பு நேரத்தில் கண்கள்
தூவிடும் கண்ணீரை போல்
உலகில் எதுவும் புனிதமில்லை.
காதில் இசைக்கின்ற அம்மா
பாட்டு யார் மறப்பார்.

சின்னஞ்சிறு குழந்தை பாச
பார்வையினால் காலினை
கட்டி அணைக்கிறது.பாசமான
நெஞ்சம் கசிய கண்கள்
தூவலை மறைத்து பிள்ளை
தூக்கி இன்பமாய் பாடும் சோகப்பாட்டு

பணம் நிறைந்தாலும் புகழ்
இறைந்தாலும் அன்பான
மனையாளின் காதல் பாசத்தால்
பிசைந்து தரும் அன்னம் கிடைக்குமா?
நெஞ்சங்களே!ஏனிந்த வெளிநாடு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (29-Nov-15, 1:43 pm)
பார்வை : 165

மேலே