பிழைக்கத் தெரிந்தவன்

பிழைக்கத் தெரிந்தவன் எனுமிச்சொல்லின்,
பொழிப்புரை நீ யறியாயோ!!!!!

உழைத்துக் களைத்து உதிரம் சிந்தி,
சலித்து, சாயா வலிமை கொண்டான்..
மெய்மை மறைத்து, பொய்மை சமைத்து,
நடித்துப் பிழைக்கும் நுட்பமறியான்....

பிழைக்க மாட்டான் கேளீர்....

அகத்தின் வண்ணம் முகத்தில் படாமல்,
அமைப்பில் வனப்பை அமைத்து சமைத்து,
அகத்துள் விஷமும், புறத்தில் நயமும்,
உதட்டில் நகையுடன் நடித்துக் கதைப்பான்,

உழைப்பின் ரத்தம் உறிஞ்சிக் குடித்து,
களைத்துப் போனவன் கண்ணீராலே,
ஊனைக் கழுவி அவித்து சமைத்து,
களித்துச் சுவைக்கும் கபட தாரன்,

இவனே பிழைப்பான் இப்பொய்யுலகில்....

நரகின் நகலாய் விளங்கும் இங்கே,
“நடிகன்” தானே “பிழைக்கத் தெரிந்தவன்”

எழுதியவர் : ஜனார்த்தன் (11-May-15, 6:16 am)
பார்வை : 225

மேலே