பூமி நினைக்கும்
சமூகத்தின் அவலத்தால்
நீ அழுதால்
உன் கண்கள் சுத்தமாகும்
சமூகம் தான்
அசுத்தமாகும்,
வெட்கப்பட வேண்டியது
நீ அல்ல
அசுத்தமானதற்கு சமூகம்
அசிங்கப்படாதபோது
மனிதன் படைத்தவற்றில்
சட்ட நடைமுறையில்
இல்லாமலிருப்பது
மனிதாபிமானம் மட்டுமே !
விதைகளையே
வேடிக்கையாக நினைக்காத
வயல்கள் இருக்கும்போது
மனிதனையா பாரமென்று
பூமி நினைக்கும் !