உண்மைகள்—5

எது நல்லது, எது கெட்டது என்று
எதனையும் சொல்ல முடியாது
ஆசை தான் அதனை நிர்ணயிக்கும்

அழியக்கூடிய மண்ணுலகிலிருந்து
அழிவற்ற விண்ணுலகத்திற்கு
செல்லும் பயணம் தான் மனித வாழ்க்கை

நேர்மையும், மனசாட்சியும்
நிறைந்த நல்லவன் ஒருவனுக்கு
அரசியல் எப்போதும் உதவாது

கருக்கலில் எழுந்து,கடவுளை துதித்து
கடும் உழைப்பை காணிக்கையாக்கினால்
கைவிடுவானா இறைவன்

படிக்காமல் இருப்பதை விட
பிறக்காமல் இருப்பதே மேல்
அறியாமை உயிரை பறித்து விடும்

சிந்தனையும், செயலும்
ஒன்று பட்டால் தான்
மாற்றத்தை உருவாக்க முடியும்

நல்ல பழக்க வழக்கங்கள்
நற்பண்புகளை நமக்கு தந்து
நம்மை மேன்மையடையச் செய்யும்


பழக்கங்களை நாம் உருவாக்குகிறோம்
பின்னர் பழக்கங்கள்
நம்மை உருவாக்குகின்றன

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jun-22, 2:14 pm)
பார்வை : 32

மேலே