தத்தித் தாவும் மனம்
நம் மனம்
கோபமில்லாமல்
நிதானத்தில்
இருக்கும் போதும்
நம் மனதில்
தவறான கருத்துகள்
இல்லாத போதும்
நம் மனதில்
முடிவுகளை எடுப்பதற்கு
வாய்ப்புகள் அதிகமாக
இல்லாத போதுதான்
நல்ல முடிவுகளை
நம்மால் சரியாக
தேர்வு செய்ய இயலும்
தத்தித் தாவும் மனதில்
எண்ணங்கள்
நிலையில்லாமல்
அங்குமிங்கும்
அலையும் போது
நல்ல முடிவை
எடுக்க இயலாது....!!
--கோவை சுபா