வணங்கும்

நீண்ட பயணத்தின் போது
நீரை சுமந்து வந்துத்
தொண்டையை நனைத்துத்
தாகம் தணித்து
உயிரைக் காக்கும் பிளாஷ்டிக்கை
உள்ளம் நினைத்து பார்க்காமல்

வாழும் மனித உயிர்களுக்கும்
விலங்குகளுக்கும்
ஒவ்வாமை ஏற்பட்டு
உயிரிழக்க நேரும் என்பதால்
கால் பதித்த பிளாஷ்டிக்கை
கழிவுப் பொருளெனக் கூறி
கடையாந்தரமாக்கினார்கள்

வேண்டாத பிளாஸ்டிக்கை
உருக்கி சாலை போட
உபயோகித்தால்
போடப்படும் சாலைகளும்
பாமர மக்களுக்கு உதவும்
உருமாறிய பிளாஸ்டிக்கும்
அநுதினமும் பாமர மக்களின்
பாதம் தொட்டு வணங்கும்

எழுதியவர் : கோ. கணபதி (13-Feb-24, 8:42 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vanangum
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே