ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு
மௌனமே நீ நீங்கிவிட்டால்
மார்கழிக்குளிர் கோடை வெய்யிலாகிவிடும் !
மௌனமே நீ இதழ் திறந்து மொழிந்துவிட்டால்
காதலின் அர்த்தங்கள் சிதைந்து போகும் !
மௌனமே நீ கலைந்து போனால்
மாமுனிவர்களின் தவமும் வீணாகும் !
மௌனமே நீ மௌனமாகவே இருந்தால்
சுரங்கள் சுக ராகங்களின் இசை பாடும் !
ஆதலால் மௌனமே நீ மௌனமாகவே இரு !!!