பூனைக்கூட்டத்தில் யானை ஏன் வராது

கூட்டங்கள்
எப்போதும்
மதில் மேல் பூனைகள்.
கூட்டங்கள்
கூடி விடுகின்றன
எப்படியோ எங்கிலும்...
தமக்குள்
முணுமுணுத்து தம்முள்
கிளுகிளுக்கும் என்றும்
அவை கருத்து பகராது.
தத்துவங்களைச்
செருப்பால் அடித்த
வரலாறு அதற்குண்டு.
கூட்டங்கள் வெறும்
குமிழிகள்...
ஒன்றலிருந்து ஒன்று
முகிழ்த்து வெடிக்கும்.
கூட்டங்கள் ஒரு கணத்தில்
உதிரிகளாய் பிரியும்
அன்றைக்கு கிடைத்த
அப்பம் கௌவியபடி...
அப்பங்கள் தீருமட்டிலும்
பூனைகள் இருக்காது
மதில்கள் எங்கிலும்...
வால் நெளித்து
அலையும் பூனைக்கு
தெரிந்த விஷயம்..
எந்தக் கூட்டத்தில்
எப்படி நெளிந்து
எப்படி உரசவேண்டுமென்று.
இன்னும் தெரியும்...
கூட்டத்தில் யானைகள்
வராது என்பதும் கூட...

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Mar-18, 6:10 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 245

மேலே