கவிதை என்பது
கவிதை என்பது...
காகிதக் கடலில்
எழுத்துகளின் வெள்ளோட்டம்!
நடைபழகும் குழந்தைபோல்...
இலக்கிய வீதிகளில்
தடுமாறி விழும்
கவிஞனின் விடாமுயற்சி!
கற்பனைக் கொடியில்
கசக்கி காயப்போட்ட
எண்ணங்களில்...
பக்குவமாக உலர்ந்த
வார்த்தைகளின் சேமிப்பு!
வாழ்வில் தோற்றுப்போன
ஏதோ ஓர் உயிரின்...
வெற்றிக் கதவுகளை
தட்டும் கரங்கள்!
ஸ்வரங்களை
மனதில் அடக்கிக்கொண்டு
அதன் அலைநீளத்தின்
நீட்சியில்....
வலி தாங்காத
ஊமைக்குயிலின்
சிறகுகள் பாடும் சங்கீதம்!
வருத்தத்திலும்...
மகிழ்ச்சியிலும்...
மூளைக்கு மனம் அனுப்பும்
அதிர்வுகளை
பதிவு செய்யும்
எழுதுகோலின் தரவுகள்!
வாழ்வின்
அற்புத நிமிடங்களை
குடிக்கும்...
தனிமைக் கொலையாளியின்
கழுத்தை வெட்டும்
உற்ற நண்பன்!
சில நேரங்களில்
ஊமையாகிப்போகும்
உதடுகளின்...
பகுதிநேர
மொழிப்பெயர்ப்பாளர்
கண்கள் சிந்தும்
கண்ணீர் துளிகள்!
இறுதியாக...
நாய்களின் மொழியில்
தங்களுக்குள்ளே
குரைத்துக்கொள்ளும்
வாதம் விவாதத்தின்
ஒலிகள்கூட...
கவிதைகளாக
இருக்கலாம்!!!