துளியே துளிரே
துளியே...! துளிரே...!
மெளன –
அதிர்வின்...
மணித்திரள் முடிப்பே...!
இமைகளின்
பிரிவினில்...
இளகிடும் மதியே...!
வெண் –
விழி முகில்கள்...
விதைத்த மழையே...!
இதயம் வருடி
இறகுயென உகுந்த...
கண்ணீர் பூவே....!
அஞ்சன –
குயில்களின்
அமுத கானமே...!
நெஞ்சகம்
கோதி யோடிடும்
நெய்தல் தாரையே...!
உணர்வு
உறைய வூறும்
உணர்ச்சி துளியே...!
மானுட
தளிர்தன்
மாதவத் துளிரே...!