பெண்ணே!
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே!
புதுமை பெண்ணே!
காலம் கனியுமென
காத்திருந்தது போதும்..
மூலையில் முடங்கி
மனமுடைந்தது போதும்..
இனி தடைகளை தகர்த்தி,
மடைமைகளை உடைத்திடு..
அடக்கத்தை ஆயுதமென ஏந்தி,
உன்னறிவினை வாளென வீசிடு..
சிரமம் கொண்டு எண்ணாதே,
துனிந்தால் சிகரமும் காலடியிலே..
அச்சத்தை பழுதாக்கு,
முத்திரையை முழுதாக்கு,
உலகப் பார்வையிலே!
தனித்துவம் படை,
அத்தியாயத்தை உடை..
களம் உனதே,
கனவுகளை நிஜமாக்கு..