மனித ருக்குத் தோழனாய்
மனித ருக்குத் தோழனாய்..!
சுட்டி..! சுட்டி..! நாய்க் குட்டி
சூட்டிகை யான நாய்க் குட்டி..!
குட்டிக் குட்டி நாய்க் குட்டி
கும்மாளம் போடும் நாய்க் குட்டி..!
கட்டிப் போட்டால் கத்தியே
கதிகலங் கடிக்கும் நாய்க் குட்டி..!
எட்டிப் போனால் காலினை
சுற்றி வருமே நாய்க் குட்டி..!
நன்றி காட்ட நம்மவரை தன்
நாவால் நக்கும் நாய்க் குட்டி..!
அன்றிலை போல் நமை யண்டி
அன்பை பொழியும் நாய்க் குட்டி..!
மன்றம் வீசும் தென்ற லென
மகிழ்ச்சி யூட்டும் நாய்க் குட்டி..!
கன்றைத் தேடும் தாயென நம்
வருகைக் கேங்கும் நாய்க் குட்டி..!
நாட்டைக் காக்கும் வீரனாய்
வீட்டைக் காக்கும் நாய்க் குட்டி ..!
சேட்டை செய்து விளை யாடும்
தேட்டை யான நாய்க் குட்டி ..!
பாட்டை தன்னில் சிங்கமாய்
நோட்டம் போடும் நாய்க் குட்டி ..!
வேட்டை யாடும் பொழு தில்
தனி வீரங்காட்டும் நாய்க் குட்டி!
மனித ருக்குத் தோழனாய்
மாகவி யுரைத்த நாய்க் குட்டி ..!
கனிந்த பார்வை துலங்கிடவே
முக காந்த மான நாய்க் குட்டி ..!
அணிந்த மாலை மலரெனவே
தோளில் தாவும் நாய்க் குட்டி ..!
பனிபோற் பழகும் நனிசீரான
ஜார்விஷ் நமக்குத் தாயாம் சுட்டி ..!