எமக்கு தொழில் கவிதையல்ல

கண்டதுண்டா?
நீள் துயிலில்
எட்டி உதைத்த ஒரு
வார்த்தையில் விரியும்
பழைய நகரத்தை...
வறண்ட சதுப்பில்
நத்தைகூட்டில்
தேங்கிய துளிநீரை...
நில்லாது பாயும்
கழுதைக்குட்டியின்
மன அவசத்தை..
என்றோ கிடைத்த
எதிர்பாரா முத்தத்தின்
நினைவுகளை...
இன்னும் உண்டு.
தனித்த பயணம்.
பாதி இளைத்த
நண்பனின் கண்கள்.
தென்னையில் விரையும்
எறும்பின் பயணம்.
நாய்க்குட்டி பாஷை.
சாலையில் கிடக்கும்
கவிழ்ந்த செருப்பு.
இவையிலும்
உண்டே கவிதைகள்...
எப்போதும் பெண்ணின்
இடுப்பில் தொங்கல்
மட்டுமே கவிதையா?
காமத்தை காதலாய்
விசிறி விட்டு வழிவது...
உன் பெயரை பார்த்தால்
மனம் நடுங்குகிறது...
நழுவி ஓடினாலும்
விரல்பட்டு விழிக்கும்
கவிதை நாற்றத்தில்
வெடித்து சிதறுவேன்...
உன்னை சொறிவதற்கு
என் பேனா நகராது.
நண்ப...
புரிந்துகொள் நீ...
கவிதை என்பது
டவுன்பஸ் விளம்பர
நோட்டிஸ் அன்று...
உன் மூல பௌத்திர
அவஸ்தை மருந்தல்ல.
உறைக்கும் என்று
அவர் சார்பாக
நான் நம்புகிறேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (29-Mar-18, 9:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 102

மேலே