அறமெனத் திகழ்வாய்

அறமெனத் திகழ்வாய்.

கூர்ந்து கேள்..!
குருவியும்...
குருவாய் தோன்றும்.

பணிந்து பயணி..!
பாறையும்...
பாதை நெய்யும்.

அமைதி கொள்..!
ஆர்பரிக்கும் அலையில்...
கவிதை நுரைபூக்கும்.

கருணை செய்..!
கல்லும் மணலும்...
கற்கண்டின் தித்திப்பாகும்.

தினமும் தேடு..!
திருக்குறளோடு...
மானுடப் பண்பாடு.

பகுத்தறிவு பழகு..!
பார்த்திட கிட்டிய அறிவு...
பாராததன் ஞானமாகும்.

பொறிகள் அறி..!
நெறிகள் பிறழா...
அறமெனத் திகழ்வாய்.

எழுதியவர் : இராக. உதயசூரியன். (20-Oct-15, 6:58 pm)
பார்வை : 83

மேலே