நாடு ஜடம், சமூகம் ஜீவன்
நாடு ஜடம்
சமூகம் ஜீவன்
இதனிடையே மானிடம்.
சிக்கித்தவிக்கிறது,
சிரிக்கிறது, சிரித்தால்.
அழுகிறது, அழுதால்.
அவ்வளவே...
அதற்குமேல்
வேடிக்கை பார்க்கிறது,
நல்லதையும்
கெட்டதையும்.
மொழி இனம்
காட்சி கருத்து
சம்பந்தமானதெல்லாம்
செய்தி..
அறிய தெரிய புரிய..
அரசியல் உரிமை கடமை
என்பதெல்லாம் வரலாற்றின் பக்கங்கள்,
நாகரீகம் முன்னேற்றம்,
வெளிச்சங்கள்;
மற்றதெல்லாம் இருட்டுகள், திருட்டுகள்..
இந்த சூழலில் மானிடத்திற்கு
வரும் சில சோதனைகளில்
எதிர்த்து பேசுவதும் போராடுவதும்
அநாகரீகம் என்றே அமைதி காக்கிறது,
அது தான்
கௌரவம் என்றும்
மனிதம் என்றும்
நம்புகிறது..
விலங்கு தான் சண்டையிடும்,போராடும்,
மனிதம் அப்படிப்பட்டதல்லவே.
அதனால் தான்
கொஞ்சம் தள்ளியே
நகர்கிறது மானிடம்
பிச்சைக்காரர்களைப் பார்த்ததும்....