மறக்கமுடியவில்லை
எனக்கு பிடித்த
காற்று என்றால்
சுவாசிக்க
ஆசைப்பட்டேன்
சுவாசித்தேன்....
எனக்கு பிடித்த
மலரென்றால்
மல்லிகை
மனம் கவர்ந்தது
பார்த்தால் - ஒரு
முறையேனும்
நுகராமல்
என் மனம்
லயதில்லை......
நடக்க பிடிக்கும்
என்பதற்காக
நாற்பது கிலோ மீட்டர்
நடந்தே பழகியதை
இன்றும் - என்
மனம் மறக்கவில்லை ...
மரங்களில்
வேம்பு வேடிக்கையானது
கடக்க நேரிட்டால்
சில நிமிடமேனும்
இளைப்பாற
தவறியதில்லை....
பறவைகளில்
சிட்டுக்குருவியின்
சில்மிசத்தை
அது கூட
ஒரு நாள் என் கையில்
முத்தமிட்டுத்தான்
அனுப்பினேன் ...
ஆறுமாத
ஆட்டுக்குட்டியை
அள்ளி கொஞ்சும்
வாய்ப்பு
அடியேனுக்கு
கிடைத்தது
மகிழ்ச்சியின்
எல்லையை
அன்றுதான்
உணர்ந்தேன்....
குளத்தில் குளிக்க மட்டுமா
நீச்சலும் அடிக்கத்தான்
குளத்தில் குதித்தேன்
அக்கறையுடன்
''அக்கரை'' தொட
நீச்சல் தெரியாது
என்பதை மறந்து
அதன் விளைவு
மரணத்தின்
மடிவரை தொட முயற்சித்து
மீண்டு வந்ததை
மறக்கமுடியவில்லை ....
மறக்கவும் மனமில்லை ...