அய்யோ
அய்...யோ...!
தொங்கல் ஆரம் போல்
தொய் வாய் கவிழ்ந்த
பொய் யாம் கொம்பில்
கொய் யாக்கனி ஒன்று
ஒய்யா ரமாய் ஊடாடிவே...
கொய்யா இலை யுடலும்
கோவை நிறவா யலகும்
குன்றிமணி விழி பார்க்க
கொண்ட பசி யாறிடவே
கொய்ய அப்பழம் நாடி...
நொய்யுங் காம் பினிலே
வெண்ணை நழுவலென
அய்...யோ ! பையப் பையநீ
நடை பயிலும் பாங்குதான்
என்னே? பைங்கிளியே!