பூம்பாவாய்

பூம்பாவாய்....!
உன் அன்பு
விழிப் பூ...!
விதைக்கின்ற
பன்னீர் பூ....!
பார்வையினால்....
என் -
வாழ்வுப் பூ...!
மலரும் மென்று
கனவுப் பூ ...!
சுமக்கின்ற
இதயப் பூ ...!
துடிப்போடு.....
இங்கு -
உனக்காக...
உதித்தப் பூ...!
இன்று -
உனைக்கானாது...
உதிரும் பூ ...!
என்றும் -
உனக்கான...
இவ் உதிரிப் பூ...!
இனியும் -
உகுந்திடுமோ...
கண்நீர்ப் பூ...!