எங்கேயோ
எங்கேயோ....?
உன் -
இதழ் அவிழ்ந்த
இள நகையாள்...!
என் -
இதயமானாய்...!
உன் -
மணங் கமழும்
மதுரத்தினால்...!
என் -
மார்க்கமானாய்...!
உன் -
அசைதாடும்
அழகதனால்....!
என் -
ஆலய மானாய்.....!
உன் -
உதிரத்தின்
உயிர் ஏற்றி....
என்னில் -
உதித்திட்ட ரோஜாவே....!
இந்த -
தவத் தளிரை
வெட்டி கொண்டு...
நீ -
தவழ்ப் போவது
எங்கேயோ....?