நனவான கனவு

சாட்சியங்கள் வேண்டாமென சத்தியம் செய்தாய் நம் காதலுக்கு

பின் ஏனெடி தினம் என் நித்திரையில் வந்தவள் இன்று விழித்திரையில் வந்து விட்டாய்

புலி கண்ட மான் போலானது என் இதயம் படபடப்பில்

எனினும் தப்பிக்க மனமில்லை உன் விண்மீன் விழிகண்டு

என் வார்தையால் வலை பின்னி உன் வாலிபத்தை சிறை பிடித்தேன் என்
அரும்பு மீசையில்

நிமிர்ந்து பாரடி பெண்னே !
என்னவளான கண்னே !

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Mar-15, 2:47 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : nanavaana kanavu
பார்வை : 71

மேலே