மானுட மனங்களோ
மானுட மனங்களோ....!
அஹிம்சையை...
எங்களுக்குள்
விதைத்த
உம்மை....!
ஹிம்சையால்...
அறுவடை -
செய்தோம்...!
அன்னிய தேசத்தின்
வெள்ளையன் -
காத்த உன்னை...!
இந்திய தேசத்தின்
கொள்ளையர்
நாங்கள் -
கொலை செய்தோம்...!
இங்கு
சத்திய -
சோதனையை
வீழ்த்திய...
அசத்தியத்தின்
வேதனை தீயாய்
உன் மரணம்...!
செய்...அல்லது
செத்து மடி...
என்ற உனது -
வேத வசனம்...
தீவிரவாதிகளின்
திருவாசகமானது
எங்களின்-
துர்ப்பாக்கியமே...!
மகாத்மாவே...!
உம்மை -
இந்த மண்னகம்
மறுதளித்திருக்கலாம் ,
ஆனால்
மானுட மனங்களோ
வசீகரித்துக் -
கொண்டிருகின்றன...!