புதுமைப் பெண்

கடவுளின் உன்னத படைப்பின்
உச்சக் கட்டம் பெண்மை.
இம்மண்ணில் நம்பிக்கை பெண்மை
மனித குலம் தழைக்கவும் பெண்மை.

அன்பின் உறைவிடம் பெண்
அழகின் உறைவிடம் பெண்
பொறுமையின் மறுபெயர் பெண்
போற்றுதலுக்குரியவள் பெண்.

கல்வியிலும் சிறந்து விளங்குவாள்
கல்வி கற்பித்தலிலும் சிறந்தே நிற்கிறாள்
காவலிலும் பெண் விண்கலத்திலும் பெண்
கணிப்பொறியிலும் பெண் களப்பணியிலும் பெண்

எங்கும் பெண் எதிலும் பெண் - இவள்
பாரதி கண்ட புதுமைப் பெண்.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்
கொண்ட நம் தாய் நாட்டின் தன்னிகரில்லா தங்க பெண்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (24-Oct-15, 1:02 pm)
பார்வை : 523

மேலே