ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன்
இடம்:  Muscat
பிறந்த தேதி :  16-Apr-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2015
பார்த்தவர்கள்:  475
புள்ளி:  48

என்னைப் பற்றி...

நான் மஸ்கட்டில் பங்களாதேஷ் பள்ளியில் நடுநிலை பிரிவின் தலைவர் ஆக வேலை செய்கிறேன். சொல்லரங்கம், பட்டிமன்றம், ஆகியவற்றில் பங்கேற்றுள்ளேன். கவிதை சிறு வயதிலிருந்து எழுதினாலும்தொடர்ந்து எழுதவில்லை. இப்போது ஒரு 8 மாதங்களாக ஒரு முனைப்போடு எழுத ஆரம்பித்துள்ளேன். என்னுடைய மகன் தற்போது இந்தியாவில் கல்லூரியில் படித்து வருவதால் அவனை பிரிந்து வாழும் கவலையை மறக்க எழுத ஆரம்பிதேன். ஒரு நல்ல வடிகாலாக இருக்கிறது.

என் படைப்புகள்
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் செய்திகள்
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2019 1:39 pm

இன்னுமொரு புது ஆண்டு மலர்ந்ததே நம் வாழ்வில்!
நன்றிகள் பல அற்பணிப்பேன் இறைவன் காலடியில்
புதியதாய் எதுவும் வேண்டுமென்று வேண்டேன்
இருப்பவை எல்லாம் தங்கிட வேண்டுவேன்

நம் வாழ்வு என்றும் நம் கையில் அறிவேன் நானும்
அதன் அருமை காக்க அருளை வேண்டுவேன் நாளும்
பரிவுக்கொண்ட ஈகையுள்ளம் என்றென்றும் நிலைத்திட
பாசத்தோடு நேசத்தையும் சிந்தையினுக்குள் புகுத்துவேன்

பெற்றோர் அருகிருந்து வாழ்த்த வேண்டும்
ஆன்றோர் சான்றோர் துணை பெறுக வேண்டும்
பெண்மையின் மதிப்பு ஒங்க வேண்டும்
பெண்களும் மதிக்கும்படி நடக்க வேண்டும்

இயற்கை வளம் பெருக நாட்டில் நலம் வளரும்
நல்லவை பெருகி அல்லவை அகல வேண்ட

மேலும்

ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 1:37 am

விண்ணில் தேங்கி கார்முகிலாகி
மண்ணில் விழும் மழையே!
கதிரவனின் செங்கதிருக்கஞ்சி
மேலெழுந்த மண்ணின் நீரே!
நீ சென்றாய் காற்றினூடே!

மென் சாரலாய் கீழ்வந்து
அழகு நதியாய் பாய்வாய் என இருக்க
நீயோ வந்து சேர்ந்தாய் பொங்கு கடலாக
நீ விண் சென்ற போது கடலைன்னையும்
துணைக்கு அழைத்து சென்றாயோ?

அன்று மாயக் கண்ணன் அங்கிருந்தான்
கோவர்தன மலை தூக்கி கோகுலத்தை காத்தருள!
அவன் இன்று வருவானா ஏங்குகிறேன் நானும்தான்
எங்கள் பரங்கிமலைதனை தூக்கி
சென்னை நகரை காப்பாற்ற!

புவிஅன்னை உன்னை சரணடைந்தேன் இப்பேதை
சிறுபிள்ளை யாம் செய்த பிழை மறந்து
கடலென தேங்கி நிற்கும் தண்ணீரை
உன்னுள்ளே உட்கொண்

மேலும்

நன்றி திரு Sarfan அவர்களே. மிகவும் கால தாமதமாக நன்றி உரைத்ததற்கு மன்னிக்கவும். கருத்து வந்திருப்பதை கவனிக்கவில்லை. மீண்டும் நன்றி 16-May-2018 12:35 am
நிச்சயம் இறைவன் பாதுகாப்பான்.காலம் வெகு சீக்கிரமே வழமை போல் சாதகாமாய் மாறிவிடும் 02-Dec-2015 9:36 am
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2015 1:01 am

மீண்டும் மீண்டும் எழு
விழ, விழ, மீண்டும் மீண்டும் எழு.
பறந்து விரிந்த இப்புவியில்
நீ நிற்க ஓர் இடம் நிச்சயம் உண்டு.

மீண்டும், மீண்டும் தோல்வி
அச்சப்படாதே, அசந்து போகாதே
தோல்வி, வெற்றியின் படிக்கட்டு
அதில் ஏறி பழகிடு, உயரத்தில் நிற்பாய்.

மீண்டும் மீண்டும் முயற்சி
உனக்கு வேண்டாம் அயர்ச்சி
வாய்ப்புகள் பல உண்டு நினைவில் வை
வாழ வழி கண்டு அதை உறுதி செய்,

மீண்டும் மீண்டும் எழுவாய்
மீண்டும் மீண்டும் முயல்வாய்
எழுவாய் பினிக்ஸ் பறவை போன்று
வருவாள் வெற்றி திருமகள் உன்னோடு.

மேலும்

நன்றி நண்பர்களே. மிகவும் தாமதமாக நன்றி உரைத்ததற்கு மன்னிக்கவும். கருத்து வந்திருப்பதை கவனிக்கவில்லை. உங்கள் வாழ்த்துக்கள், நான் மேலும் எழுத உந்துதல் அளிக்கின்றது. மீண்டும் நன்றி. 16-May-2018 12:33 am
முயற்சியை உரமாக்கும் வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 13-Nov-2015 11:48 am
தன்னம்பிக்கையூட்டும் நற்கவிதை. அழகு. 13-Nov-2015 3:03 am
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2018 8:05 pm

அம்மா……….
மூன்றெழுத்து வார்த்தையதை செவிமடுப்பின்
தேன் ஊற்று சிந்தையிலே, மகிழ்ச்சி பொங்கும் மனதினிலே!
அம்மா எனும் சொல் மந்திரம் அதுவே என்றும் சத்தியம்,
அன்னை போன்ற செல்வம் வேறெங்கும் இல்லை
அவளின்றி உலகில் இன்பம் ஏதுமில்லை.

வெயிலில் நமக்கு நிழல் ஆவாள்,
மழையினில் நல்குடையாவாள்
நம் பசி தீர்க்கும் தெய்வம் ஆவாள்
தோல்வியில் ஊக்கம் தரும் மருந்தாவாள்
விழுந்தாலும் எழ வைக்கும் கொடியாவாள்

பசித்தாலும் அம்மா, வலித்தாலும் அம்மா,
கவலையிலும் அம்மா, வெற்றியிலும் அம்மா.
அம்மா என்றிட உயிரினம் உய்த்திடும்
அம்மா என்றிடில் அன்பும் கரை புரண்டோடும்!
அம்மா என்றிடில் துன்பமும் விலகியோடும

மேலும்

ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2018 11:09 am

அகிலமே இன்று பூணுகிறது விழாக்கோலம்
அதிகாலை முதல் அன்பு அழைப்புகள் அதிகம்
வாழ்த்துக்களும் குவிகிறது வாட்ஸாப்களும் நிறைகிறது
பேஸ்புக்கையும் மக்கள் விட்டுவிடவில்லை
அகில உலக மங்கையர் தினமாம்!

ஏனோ என்மனம் ஹாசினிகளையும்
நிர்பயாக்களையும் மீண்டும் மீண்டும் நினைக்கிறது
ஸ்வாதியின் மரணம் ஏன் என கேட்கிறது
அமிலத்தில் கருகிய அழகிய மலர்களின் ஓலம்
நெஞ்சை கிழித்து உதிரம் சிந்த செய்கிறது!

இங்கு பெண்ணியம் பாடும் பாவலர் உண்டு
பெண் உரிமை பேசும் பேருரைகள் உண்டு
மங்கையர் விடுதலை மாய்ந்து மாய்ந்து
பேசிடினும், ஆண் பெண் சமத்துவம் என
சொல்லின் ஆணவமென அலட்சியமும் உண்டு

பரந்த உலகே,

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. சரிபான் அவர்களே. 09-Mar-2018 11:57 pm
பெண்மை தான் யுகத்தின் பேராற்றல் ஆனால் அதனை அடக்குமுறையில் சமுதாயம் ஆள்கிறது என்று நினைக்கும் போது தான் மனம் வலிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:06 pm
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 11:09 am

அகிலமே இன்று பூணுகிறது விழாக்கோலம்
அதிகாலை முதல் அன்பு அழைப்புகள் அதிகம்
வாழ்த்துக்களும் குவிகிறது வாட்ஸாப்களும் நிறைகிறது
பேஸ்புக்கையும் மக்கள் விட்டுவிடவில்லை
அகில உலக மங்கையர் தினமாம்!

ஏனோ என்மனம் ஹாசினிகளையும்
நிர்பயாக்களையும் மீண்டும் மீண்டும் நினைக்கிறது
ஸ்வாதியின் மரணம் ஏன் என கேட்கிறது
அமிலத்தில் கருகிய அழகிய மலர்களின் ஓலம்
நெஞ்சை கிழித்து உதிரம் சிந்த செய்கிறது!

இங்கு பெண்ணியம் பாடும் பாவலர் உண்டு
பெண் உரிமை பேசும் பேருரைகள் உண்டு
மங்கையர் விடுதலை மாய்ந்து மாய்ந்து
பேசிடினும், ஆண் பெண் சமத்துவம் என
சொல்லின் ஆணவமென அலட்சியமும் உண்டு

பரந்த உலகே,

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. சரிபான் அவர்களே. 09-Mar-2018 11:57 pm
பெண்மை தான் யுகத்தின் பேராற்றல் ஆனால் அதனை அடக்குமுறையில் சமுதாயம் ஆள்கிறது என்று நினைக்கும் போது தான் மனம் வலிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:06 pm
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2017 8:09 pm

அணைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

என்னால் முன்பு போல் அதிகமாக கவிதைகளை வாசிக்க முடியவில்லை. அந்த மனநிலையில் நான் இல்லை என்பதால் மீண்டும் சில நாட்கள் உங்களையும் தளத்தையும் விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறேன். அது நிரந்தரமானதா? இல்லை  தாற்காலிகமானதா? என்று தெரியாது.  இப்போதெல்லாம் யாருடைய  கவிதையை வாசித்த பின்னும் கருத்துச் சொல்ல பயமாக இருக்கிறது. ஒரு வேளை நான் பிழையான பின்னூட்டம்  கொடுத்து விடுவேனோ என்ற அச்சம் மனதில் விளைகிறது. அது மட்டுமின்றி வாழ்க்கையில் நிறைய காயங்கள் மனதளவில் பட்டாச்சி. இனியும் புதிதாக வேதனைகளை வாங்க என்னிடம் சக்தி கிடையாது. ஒரு வாரம் இல்லை இரு வாரம் உங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து செல்கிறேன். முடிந்தளவு உங்களுக்குள் பகிரப்படும் படைப்புக்களை குறைந்தளவாவது  வாசியுங்கள். ஆயிரங்கள் உழைப்பதை விட  கலைக்கு கிடைக்கும் உண்மையான வாழ்த்து மிகப்பெரிய செல்வம். நான் பிரிந்து போகிறேன். அணைத்து நண்பர்களும் அன்போடு பழகுங்கள். செல்லும் முன் அணைத்து தோழர்களுக்கும் "இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்" என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் 

மேலும்

அதிகம் எழுதுங்கள். தங்களின் நிலை எப்படியும் இறை அருளால் நன்றாக தென்றலாகி விடும் நண்பரே கவலை வேண்டாம் ......................... 13-Jan-2018 5:02 am
இன்று தான்உங்கள்பதிவை படித்தேன். அப்படி என்ன காயங்கள் தான் உங்கள் மனதில் உள்ளனவோ? இந்த தளத்தில் நான் எழுதிய முதல் கவிதைக்கு நீங்கள் கருத்து எழுதிய போது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா? நான் கவிதை எழுதுவதற்கு உந்து சக்தியே நீங்கள் தான். எனக்கு ஒரு வழிகாட்டி கிடைத்தார் என நினைத்தேன். இப்படி என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டீர்களேமுகமத் .வேதனையாக உள்ளது . சோகங்கள் எல்லாம் சொல்ல சொல்ல தான் குறையும் முகமத். எனவே உங்கள் காயங்களை மனம் திறந்து சொல்லலாம் . என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் தோழரே!! உங்கள் காயங்கள் தீரவும்,உங்கள் பிரிவை தடுக்கவும் வல்ல அல்லாவிடம் தூவா செய்கிறேன். adding friendship subract your enemies multiple your joy divide your " SORROWS" please divide your SORROW. 06-Jan-2018 4:47 pm
பிரிவு சில நாள் எனினும் பிரிந்திடும் உயிர் என்பது போல நம் வாழ்க்கை சில காலம் தான் எனினும் வாழ்திடுவோம் ஒன்றாக வருகை தாருங்கள் எந்நாளும்... பலர் பாராட்ட நினைத்து நேரமில்லாமல் படித்து விட்டு செல்கின்றனர் ஆனால் உங்களை போன்ற சிலர் தான் படித்து விட்டு பாராட்டுகிறார்கள் காயங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் எனினும் ஆக்காயம் ஆறுவதற்கு காலமே வழிவகுக்கும் எனவே எப்பொழுதும் வருகை தாருங்கள் 06-Jan-2018 12:18 am
Sarfan don't worry for enything If you have eny help or if u r in problem Pl tell me I will be with you 22-Dec-2017 10:24 pm

அப்பாவும் நானும் போகாத இடமில்லை
கூடிப் பேசாத கதை இல்லை
பள்ளியில் நடந்த நிகழ்வுகள்
கற்ற பாடம் பற்றிய சர்ச்சைகள்
எல்லாம் பேசி மகிழ்வோம்
மகிழ்ச்சி ஒன்றே மனதில் வைப்போம்.

பூங்காவில் பூக்களை ரசிப்போம்
கதை பல பேசி களிப்புற்றிடுவோம்
அதிகாலை நடை பயிற்சி செய்ய
கடும் பிரயத்தனம் செய்வோம்
மறுநாள் எழுந்து செல்லலாம் என
சூளுரைத்து உறங்கச் செல்வோம்.

கடற்கரை மணலில் விளையாடுவோம்
கடைத் தெருவில் பல நாள் சுற்றுவோம்
பாவாடை துணி தெரிவு செய்வோம்
அதே நிற வளையலும் பொட்டும் வாங்கிடுவோம்
அப்பா உனக்கு சோர்வு என்பதே கிடையாதா
கேட்பேன் என் அன்பு அப்பாவிடம்

பாசம் கொண்ட மகள் அருக

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 09-Dec-2017 1:42 pm
ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை அன்னையால் கூட முழுமையாக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 1:13 pm
ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 1:01 pm

அப்பாவும் நானும் போகாத இடமில்லை
கூடிப் பேசாத கதை இல்லை
பள்ளியில் நடந்த நிகழ்வுகள்
கற்ற பாடம் பற்றிய சர்ச்சைகள்
எல்லாம் பேசி மகிழ்வோம்
மகிழ்ச்சி ஒன்றே மனதில் வைப்போம்.

பூங்காவில் பூக்களை ரசிப்போம்
கதை பல பேசி களிப்புற்றிடுவோம்
அதிகாலை நடை பயிற்சி செய்ய
கடும் பிரயத்தனம் செய்வோம்
மறுநாள் எழுந்து செல்லலாம் என
சூளுரைத்து உறங்கச் செல்வோம்.

கடற்கரை மணலில் விளையாடுவோம்
கடைத் தெருவில் பல நாள் சுற்றுவோம்
பாவாடை துணி தெரிவு செய்வோம்
அதே நிற வளையலும் பொட்டும் வாங்கிடுவோம்
அப்பா உனக்கு சோர்வு என்பதே கிடையாதா
கேட்பேன் என் அன்பு அப்பாவிடம்

பாசம் கொண்ட மகள் அருக

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 09-Dec-2017 1:42 pm
ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை அன்னையால் கூட முழுமையாக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 1:13 pm

நீ பேசுவது வார்த்தைகளா? அக்னி தூறல்களா?
இதயத்தை கிழித்து விடுகின்றதே நொடிதனில்?
உதிர சொட்டுகளும் உறைந்து விடுகின்றதே!
இது நாளும் ஊசலாடும் உயிரை வியக்கின்றேன்!

வார்த்தை ஒவ்வொன்றும் துளையிட்ட இதயத்தை
இரத்தம் உறைந்ததினால் துளைகள் அடைப்பட்டதோ ?
நிறுத்திக்கொள், உன் ஆணவ சொற்கணையை,
தாங்காது என் இதயம், வெடித்துவிடும் அது நிச்சயம்.

ஒற்றை சொல் பொறுக்கா உன் சிந்தை நினைக்கின்றதா
சொற்கணையை ஏற்கும் சிந்தை மங்கைக்கில்லையென்று ?
ஆண்டாண்டு காலமாய் பெண் விடுதலை பேசினாலும்
இங்கு ஆணுக்கொரு ஒரு நீதி பெண்ணுக்கொரு நீதி!

மேலும்

இரவு பகல் அறியாது இலக்குதனை அடைய
நான் வகுத்த பாதையில் பயணித்த வேளையில்
மீண்டும் மீண்டும் கண்களினால் தூது விட்டு
காதல் கொள்ள வைத்தாயே!

பத்துமாதம் சுமந்தவளை வைத்தேன் எந்தன் நெஞ்சிலே
அதில் பாதி இடம் கேட்டு வந்து பரிதவிக்க வைத்தாயே!
நெஞ்சமது சுகமான பாரமாகி போனாலும் உறுதி கொண்டேன்
மீண்டும் மீண்டும் பிறந்து வந்து இருவரையும் சுமக்கவே!

என்னை மாற்றி, என் நினைவை மாற்றி
மீண்டும் மீண்டும் உன்னை நினைக்க செய்தாயே!
காதலாலே கசிந்துருகி உன்னை காண துடிக்கையில்
நெஞ்சமதில் புயலடிக்க வைத்தாயே!

என்னை விலகி எங்குச் சென்றாய்? ஏன் சென்றாய்?
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
விடை தெரிந்த எவரும

மேலும்

என் நாட்காட்டியில்
என்றென்றும்
பிப்ரவரி பதினான்கு
காதல் மனைவி என் அருகில்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

பிரபலமான எண்ணங்கள்

மேலே