புதிய ஆண்டே வருக

இன்னுமொரு புது ஆண்டு மலர்ந்ததே நம் வாழ்வில்!
நன்றிகள் பல அற்பணிப்பேன் இறைவன் காலடியில்
புதியதாய் எதுவும் வேண்டுமென்று வேண்டேன்
இருப்பவை எல்லாம் தங்கிட வேண்டுவேன்

நம் வாழ்வு என்றும் நம் கையில் அறிவேன் நானும்
அதன் அருமை காக்க அருளை வேண்டுவேன் நாளும்
பரிவுக்கொண்ட ஈகையுள்ளம் என்றென்றும் நிலைத்திட
பாசத்தோடு நேசத்தையும் சிந்தையினுக்குள் புகுத்துவேன்

பெற்றோர் அருகிருந்து வாழ்த்த வேண்டும்
ஆன்றோர் சான்றோர் துணை பெறுக வேண்டும்
பெண்மையின் மதிப்பு ஒங்க வேண்டும்
பெண்களும் மதிக்கும்படி நடக்க வேண்டும்

இயற்கை வளம் பெருக நாட்டில் நலம் வளரும்
நல்லவை பெருகி அல்லவை அகல வேண்டும்
நான், எனது, எண்ணம் நீங்கி நானிலம் வாழ்ந்திட
ஒன்றிணைந்து ஒற்றுமை வளர்த்திடுவோம்

போட்டியும், கலகமும், பொல்லாச் சண்டையும்
வெறும் பொய்மையென பெரிதாய் உணர்த்தியே
மண்ணில் சூழும் போர் மேகங்கள் கலைத்திடுவோம்
விண்ணில் தோன்றும் கார் மேகங்கள் வேண்டுவோம்


ஆக்கமும் அறிதலும் அங்கமாக கொள்ளவே
போராட்டமும், பொறாமையும் விட்டு விலகி ஓடிட
நட்பும், புரிதலும் நன்மை பயக்க வைத்திட
நானிலமெங்கும் அமைதியும் பொங்குமே


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (1-Jan-19, 1:39 pm)
Tanglish : puthiya ande varuka
பார்வை : 392

மேலே