காக்க காக்க சென்னையை காக்க

விண்ணில் தேங்கி கார்முகிலாகி
மண்ணில் விழும் மழையே!
கதிரவனின் செங்கதிருக்கஞ்சி
மேலெழுந்த மண்ணின் நீரே!
நீ சென்றாய் காற்றினூடே!

மென் சாரலாய் கீழ்வந்து
அழகு நதியாய் பாய்வாய் என இருக்க
நீயோ வந்து சேர்ந்தாய் பொங்கு கடலாக
நீ விண் சென்ற போது கடலைன்னையும்
துணைக்கு அழைத்து சென்றாயோ?

அன்று மாயக் கண்ணன் அங்கிருந்தான்
கோவர்தன மலை தூக்கி கோகுலத்தை காத்தருள!
அவன் இன்று வருவானா ஏங்குகிறேன் நானும்தான்
எங்கள் பரங்கிமலைதனை தூக்கி
சென்னை நகரை காப்பாற்ற!

புவிஅன்னை உன்னை சரணடைந்தேன் இப்பேதை
சிறுபிள்ளை யாம் செய்த பிழை மறந்து
கடலென தேங்கி நிற்கும் தண்ணீரை
உன்னுள்ளே உட்கொண்டு தவிக்கின்ற
தமிழ் தங்கங்களை கரை சேர்த்து காப்பாயே!

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (2-Dec-15, 1:37 am)
பார்வை : 212

மேலே