காத்திருப்போம்

ஒரு கதிராய்
இருந்த என்னை
பல பயிராக
மாற்றியது ,

பட்ட சூடும்
தாங்கிய அடியும்
வீசி எறிந்த விசையும்
மூடிப் புதைத்த மண்ணும்
மூச்சடைத்த நீரும்
முத்தம் கொடுத்த
புது ஒளியும் தான்.

தினம் உதிக்கும் கதிர் ஒளியில்‌
பட்டு வளர்த்தாலும்
ஒருநாள் உதிர்ந்து உதைபட்டு
விதையாய் புதைந்து
உரிய காலம் கட்டு
மீட்டு வந்தால் தான்
உயிர்கள் இங்கு
பிறவிப் பலன் காணும்.

ஒவ்வொரு நாளும்
கதிராய் வளர்ந்து
அனுபவ அடிகள் பட்டு
விதையாய் உதிர்ந்து உறங்கி
பயிராய் தளிர
கதிரவன் ஒளிக்கு
காத்திருப்போம்.

எழுதியவர் : கேசவன் புருஷோத்தமன் (30-May-19, 1:16 am)
Tanglish : kaathiruppom
பார்வை : 657

மேலே