சுடும் சூரியனும் - குளிர் நிலவும்
காலையில் கண்கள் விழித்தும்
கதிரவன் ஒளியில்லை
சுடுகிறான் சூரியன் மட்டும் !! .
எங்கே என் தோழன் !
அருகில் தொட்டேன்
அவனும் எழுந்தான் !! .
புதிதாக பறித்த பூக்களின் வாசம்
பனி போனபின் பாதைகழிவுகளின்
படுநாற்றம் !!.
இரண்டும் மறைந்தன !
இரண்டு நிமிடங்களில் .
இனி என்
இந்நாள் தொடக்கம் .
படுக்கையை துடைத்து
பையில் போட்டேன் !
காலணியும் காலடியில் .
நடந்தான் நண்பன் !
தொடர்ந்தேன் நானும் .
சீண்டும் சிறுநீர்மல வாடை !
ஈரமில்லா இடத்தில் இட்டேன் !
நானும் கொடை .
குடங்களின் குத்துச்சண்டை !
குழாய் அடியில்
குடிக்க தண்ணீர் .
பல்லும் மேலும்
பட்டன சுத்தம் .
கேட்டது விடுதியின்
வானொலி சத்தம் .
வாசலில் வண்டிக்கடை !
அங்கு
வாடிக்கை இட்லி வடை .
முடிந்தது காலை கடன் !
தொடங்கியது நாளை கடன் !!
விற்பனை விளையாடும் ரோடு !
விற்பனைகள் தொடங்கின கூச்சலோடு .
தோழன் தேடினான் இடம் !
கண்டதும் விரித்தேன் கடை
வருவது என்னவோ
அது தெரியா விடை !!
வாடிக்கை தான்
வண்டிகளின் சத்தமும்
வாட்டும் புகையும் புழுதியும்.
வாடிக்கையாளர்கள் தான்
இன்னும் வரவில்லை .
காலை கழிந்து
நண்பகல் வந்தது .
விற்ற பொருள்
நான்கு காணோம் !!
அது இட்டதே
எனக்கு அன்னதானம் !
உண்டதும்
உறக்கம் வரும் !
மாலைக்காற்றில்
குப்பையுடன் கூட்டமும்
வந்து எழுப்பும் .
விற்பனை !.
வழியில் வந்தவர்கள்
விழியில் விழுந்தால்
மட்டுமே !!.
கூவி அழைத்தாலும்
வராது !
குளிர்வறை கூட்டம்.
கூட்டத்தின் குரல்
அடைந்தபின் !
விற்பனை கணக்கின்
விடை தெரியும்.
வந்தது விதியென
விடைபெற !
வண்டிக்கடை வாளியில்
கையலும்பி
கரைசேரும் என் நாளும் !.
நிலவு வரும்
தென்றல் காற்றுடன்
பாய்விரிப்பேன் !
கண்கள் உறங்க !!
மீண்டும் ...
விடியும் பொழுதும் !
சுடும் சூரியனும் !.
இதில் ,
எத்திசை எதுவென்று
நான் எவ்வறிவேன் !!
எவர் முகம்
கருப்பென்று !
எப்படி நான் உணர்வேன் !!
இதில் எது கருமை ?
சுடும் சூரியனும் !!
குளிர் நிலவும் !!.
( ~இருள் என்று எண்ணாதீர்.... இவன் வாழ்கையை ~)