சுமைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
இரவுச் சுமைதாங்கியின்மீது
இமைகளை இறக்கி வைத்தேன்
*********கனவுகள்!
கனவின் நிறங்களைக்
கண்விழித்துப் பார்த்தபோது
*********வெறுமைகள் !
எண்ணச் சுமைகளை
ஏடுகளில் எழுதி வைத்தேன்
*********கவிதைகள்!
கவிதைச் சுமைகளைக்
காற்றுவெளியில் விற்றபோது
**********குப்பைகள்!
தோல்வியின் சுமைகளைத்
தோள்மீது தூக்கிவைத்தேன்
**********துயரங்கள்!
துயரக் குளங்களில்
காலூன்றி பூத்தபோது
**********தாமரைகள்!
நாளையின் சுமைகளை
நேற்றுக்குள் புதைத்துவிட்டேன்
***********சிறகுகள்!
பயணத்தின் சுமைகளை
பாதைமீதே கிடத்திவிட்டேன்
**********சுகங்கள்....! (1995)
("தரையில் இறங்கும் தேவதைகள்" நூலிலிருந்து )