வாசிப்பது சுகமே

கவிதை எழுத துவங்கியதிலிருந்து
கவிதை வாசிக்கவும் கற்று விட்டேன்!!

அதிகாலையில் என்னை ஆரத்தழுவும் பூங்காற்றிலும்

பள்ளி செல்லும் தங்கையின் ஒவ்வொரு கையசைப்பிலும்

செல்ல அன்னையின் கடிதல்களிலும்

என் அப்பாவின் புராணங்களிலும்

என் மீது விழும் ஒவ்வொரு மழை துளியிலும்

மாலை நேர தேநீர் கோப்பைகளிலும்

என் தோழியின் கன்னக்குழி சிரிப்பிலும்

பக்கத்து வீடு குட்டி குறும்பனின் சேட்டைகளிலும்

வயது முதிர்ந்த பாட்டியின் மழலை சிரிப்பிலும்

இரவு என்னும் மேடையில் அரங்கேறும் பால் வண்ண தேவதையும் காணுகையில்
மனம் லயித்து தான் போகிறது வாசிப்பது இவ்வளவு சுகமானதா என்று!!!

எழுதியவர் : குந்தவி (27-Jun-15, 3:40 pm)
Tanglish : vaasippathu sugame
பார்வை : 89

மேலே