உலகை மறந்தேன்
ஆற்றங்கரை மரத்தடி நிழலில் ஆட்டு தின்ற அருகம்புல் தரையில் அவள் மடியில் நான் அமர்ந்து கேட்ட அன்புணவு கதைகள் இன்று அவள் குரலில் கேட்கிறதே.
காலணிகள் காண காலில் கற்துகள்கள் ஒட்டி வலிந்தால் நான் துள்ள துடித்து அழும் அவளது விழியின் திரைநீர்ப்பார்வை முகதருகில் வருகிறதே.
உலகம் மொத்தம் உடனே மறந்து உன் அணைப்பில் நானும் தூங்க நெற்றிமுடி வேர்வை துடைக்கும் உன் மூச்சு காற்றின் பரிசம் தன்னை இன்று என்னை மோதும் தென்றல் தந்து என் துகில் கலைத்து செல்கிறதே.
கருவறையில் உன் கனவுகள் மொழியில் நான் கண்ட உலகம் யாவும் என் வாழ்நாளில் எனக்கு கிடைக்க உன் வாழ்வையே எனக்கு தந்து நீ வென்றாயே என் தாயே.
உன் மடியில் மீண்டும் உறங்கும் ஏக்கங்கள் என்னைப் புரட்ட இருள் உறங்கும் நேரம் வரையும் இமை விழித்து கிடந்தேனே.
........
இவ்வுலகில் எவை வென்றும் கிடைப்பது இல்லை தாயின் அன்பின் அரவணைப்பில் கிடைத்த ஆழ்ந்த உறக்கம். அவளை பிரிந்து வாழ்ந்து கிடைக்கும் சுகங்களெல்லாம் கற்பனையே.