யாரப்பா அது
கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்ததும்
முகநூளில் வள்ளுவன் குறித்து சில வரிகளை பதித்திருந்தேன் .
ஐயா !!
உன்னால் உயர்ந்தது பெருமை
உமது குடிக்கும் அந்த குடிகொண்ட
நாட்டிற்கும் .
உமது கவியை காலங்கள் கடந்தும் முழுதும் உணர முயன்று வருகிறது இவ்வுலகம் .
அத்தகைய உமது வழிவந்த குழந்தைகள் நாங்கள்
உன் போல் உலகம் போற்ற கவி படைக்க முடியாது போனது வருத்தம் என்றால் .
அதை விட கொடிய வருத்தம் உன் போல் அழகாய் சம்மணக்காலிட்டு ஒழுங்காய்
உட்கார கூட முடியவில்லையே ..
முயன்றவர் யாரோ முடியாது என்று உணர்ந்து உன்னையும் இப்படி நிற்க வைத்து விட்டார்களே ...
நடுக்கடலில் .
என்று,
கவியால் காலங்களில் நின்றவர்
கடலில் நிற்கிறார் .
என்ற தலைப்பில் பதித்திருந்தேன் .
அதை பார்த்த நண்பரோ கருத்துகளில் கேட்டார் ..
எப்படி பயணம் ?
பயங்கரம்
ஹா.. ஹா.. என்ன ?
அதை ஏன் கேட்கிற
பயணத்தில் என் பையன் கேட்டான்பாரு ஒரு கேள்வி ஆடிப் போய்டேன் .
அப்படி என்னடா கேட்டான் ?
அப்பா.. அங்க பாருங்க தாடி வச்ச காந்தி தாத்தா ...
அடேய்... அது காந்தி தாத்தா இல்ல டா.
அப்போ யாரப்பா அது ?
திருவள்ளுவர் டா.
உன்னோட பையனுக்கு திருவள்ளுவர் கூட தெரியாதா ?
டேய் .. அவன் மூணு வயசு பையன் டா .. பள்ளிக்கூடம் கூட போகல .
அப்போ.. எப்படி டா அவனுக்கு காந்தி மட்டும் தெரிஞ்சாரு ?
எல்லா ரூபா நோட்டுலையும் தான் அவர் படம் இருக்கே..
உங்க வீட்டுல வள்ளுவர் படம் ஒன்னு கூடவா இல்ல ?
வரும்போது வாங்கிட்டு தான் வந்தேன் .
..........
வீட்டு சுவற்றில் வள்ளுவன் வந்த கதை முடிந்தது ....
டாட் டா .....