முத்தம் வேண்டாம் முகவோளி போதும்

ஒருவன் மட்டும்
வாழ்ந்த உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்!

இன்று என்னை இழந்த
அந்த உலகமும்
உன்னை சுற்ற வேர்க்கிறேன்!

எங்கோ தொலைந்த
எந்தன் முகத்தில்
உன்னால் தானே
என் விரல்!

என் கண்கள் மூடி
மூச்சும் முட்ட
களைந்த முடியை
நெற்றிக் கோதி
நேராய் நின்று
என் விண்ணை
இன்று பார்க்கிறேன்.

எந்தன் உலகின் முதல் நிலவே!
முதல்முறை என் வானில்
நீ ஒளி தந்தாய்.

உன்னால் இன்று
என்னை மறந்து
நான் ஒருவன் மட்டும்
வாழ்ந்த என் உலகில்
உன்னை இன்று பார்க்கிறேன்.

இனி சுற்றும் உலகம் நிற்கும் போதும்
உன்னை சுற்றி திரிவேனோ!
நீ உன்னை தந்து என்னை வென்றால்
ஒன்றாய் நானும் கரைவேனோ!

முத்தம் வேண்டும்!
உன் முகவோளி போதும்!
அதை நித்தம் வேண்டி
உன்னால் நான் வாழ்வேனே!

சத்தமில்லா நிழலைப்போல
என்றும் ஒன்றாவே
இருளில் கலந்து
பகலில் படர்ந்து
உன்னோடு நான் வாழ்வேனே!

எழுதியவர் : கேசவன் புருஷோத்தமன் (29-May-19, 1:47 am)
பார்வை : 278

மேலே