நதி

சிந்து நதிக் கரைகளில்- சில
நாகரீகம் வளர்த்த வரலாறுண்டு.;
கதிர் விளைந்த காடுகளில்- பல
காலங்கள் வாழ்ந்த பழமையுண்டு;
வண்டல் மண் படிவுகளில்-பொன்
வார்த்து மகிழ்ந்த மழலையுண்டு;
தேனாறும் பாலாறும் போகும் பாதையில்
வேற்றுமையில் ஒற்றுமை படித்ததுண்டு;

திங்களோடு தவழயிலே கன்னிநதி;
மஞ்சள் குழைத்து போகையிலே மங்கை நதி;
பொன்னை வார்த்த சாயலிலே பெண்ணின் நதி;
தென்றலோடு நினைவுகள் தவழ்ந்ததுண்டு;

நதிக்கரைகளின் வளைவுகளில்
கார்முகில்களின் நெளிவுகளில்
இருஉருவங்கள் பார்த்த மோகமுண்டு;

விவசாயம் பொய்க்கும் காலங்களில்-விழும்
பண்பாட்டின் சாயல் நீரிலுண்டு;
மருதம் வளர்த்த மங்கையின் மேனியில்
இரசாயன விழுப்புண்கள் மிக்கவுண்டு;
இருக்கும் தலைகளை இழக்கும் காலங்களிலும்
வறண்ட நதியிலும் வரலாற்றின் எச்சமுண்டு;

எழுதியவர் : (10-Feb-17, 10:13 pm)
Tanglish : nathi
பார்வை : 74

மேலே