நிழலும் அரசியல்வாதிகளும்

நிழலும் அரசியல்வாதிகளும் !

நிழல் ....
காலையில் முன்னே
சென்று வணங்குகிறது !
தேர்தலின்போது
நம்மையெல்லாம்
அரசியல்வாதிகள்
வணங்குவதைப் போல.

நிழல்...
பிற்பகலில் நம்
பின்னே தொடர்கிறது !
தேர்தல் நாளன்று
தம் ஓட்டுக்காக.
நம் பின்னே வரும்
அரசியல்வாதி போல.

நிழல் ...
இரவில் அது
இருக்கும் இடம்
தெரியாமல் மறைகிறது !
வெற்றி பெற்ற பிறகு
தொகுதிப் பக்கமே
வராத
அரசியல்வாதி போல !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (10-Feb-17, 10:17 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 143

மேலே