பூதத்தின் உலகம்

வண்ணங்களால் ஆன ஊருக்கு
வழி சொல்கிறது அந்த ஓவியம்;
அதன் ஒரு குவியத்தில் தோன்றிய வெளிச்சம்தான்
எனது புகலிடமாக இருக்க வேண்டுகிறேன்;
ஒரு சுழலும் ராட்டினத்தை போல் சுழலும்
அதன் பாதை எங்கு தொடங்கி தொடர முற்பட்டாலும்
ஏதோ ஒரு புள்ளியில் குழப்புகிறது;

அதன்மாயையில் கவர தலைப்பட்டவன்
சட்டென உள்நுழைகிறேன்;
அது என்னை முகமன் கூறி அழைக்கிறது;

வண்ணங்களில் குழைந்து வெளிச்சத்தில் திளைக்கிறேன்;
வண்ணங்களும் வெளிச்சமும் மின்னி மின்னி மறைகின்றன;
சில வண்ணங்கள் கேளிக்கையூட்டுகின்றன;
சில வண்ணங்கள் போதையூட்டுகின்றன;
சில வண்ணங்கள் என்முன் கட்டுகளாய் விரிகின்றன;
இன்னும் சில வண்ணங்களுக்கோ குதிரை மனது;
இறுதியில் சில வண்ணங்கள் என்னை காட்சிப்படுத்தி சிரிக்கின்றன;

அதன் மொத்த உலகமும் ஒரு பூதத்தின் வாய்க்குள் இயங்கிக் கொண்டிருந்ததை பற்றி ஏனோ எனக்கு கவலையில்லை...

எழுதியவர் : (10-Feb-17, 10:18 pm)
சேர்த்தது : வித்யா
Tanglish : vannangal
பார்வை : 61

மேலே