மண் தாரகைகள்

அது ஒரு ராக்கால பயணம்
தரை விட்டு மலை ஏறி
தரை இறங்கும் பயணம்...

பேருந்தில் உட்கார்ந்து
என் வாழ்வை நான் எண்ண
என்னைக் கேளாமல் - என் விழியிரண்டும் துயில் கொள்ள
பயணத்தின் அரைவாசி
கடந்ததுவும் தெரியவில்லை!

மலை மீது ஏற ஏற
சில்லென்ற பனிக்காற்று
சீண்டியது என்னை
சாளரத்தை திறந்து கொண்டு
என் விழி மெல்லப் பாய்கையிலே
ஆஹா! தரை மீது
எத்தனை தாரகைகள்!

நான் இருப்பது
பூமியா... விண்வெளியா...

அவை தொலைதூர
மின் விளக்குகள் - அடடா!
அத்தனையும் தாரகைகள்...
***

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (2-Apr-16, 9:40 pm)
Tanglish : man thaaragaikal
பார்வை : 172

மேலே