காதல் மாளிகை

ஊரெங்கும் காணலாம்…
இந்த
வண்ணப் புன்னகை!

கைகளால் தொட்டு பறிக்கலாம்
இந்தக்
காதல் மாளிகை!

தன்
வாசனைக் கைகளால்
வரவேற்று கைகுலுக்கும்.

இந்த
வண்ணத்து பூச்சிகள்
சிறகுகள்
இல்லாமலேயே..
காற்றில்
படபடக்கும்!

பூமியெங்கும்
இப்படி
கூடை கூடையாக
பூக்களை நிரப்பி
அதை
பூமிப் பெண்ணுக்கு
ஆடையாக மாற்றித்
தந்தது யார்…?

பூ
தன் அழகினை
நினைத்து
பெருமிதம்
கொள்வதில்லை ..
அதனால் தான்
அது தேவ அழகில்
மின்னுகிறது.

பூ…
தன் அழகினால்
பிறர்க்கு
அழகு சேர்க்கிறது…
தன் வாசனையால்
பிறர்க்கு
வாசனை சேர்க்கிறது.
அதனால் தான்
அது நிலைத்த புகழுடையதாக
இருக்கிறது.

இந்த பூமியில்
அன்பு தினம்
பூப்பதற்கான
அடையாளம்
பூக்கள் தான்.

பூக்களின் அழகினைப்
பாட வந்தால்
வார்த்தைகளும் கூட
வண்ணம் பெற்று விடுகின்றன!

எழுதியவர் : பரதகவி (2-Apr-16, 8:32 pm)
Tanglish : kaadhal maalikai
பார்வை : 115

மேலே