என்னவனின் சுவாசம் நான்
என்னவனின் சுவாசம்
என உணர்ந்தேன்
அவன் நேசம் அறிந்த போது.....
என்னவன் என்னை
கடந்து செல்கையில்
வீசிச் செல்லும்
பார்வையில் விழுந்தேன்
அவன் காதலில் மூழ்கினேன்....!
அவன் என்னை நெருங்குகையில்
என் சுவாசம் தடைபடுகின்றது
இதயம் இருமடங்காய்
துடிக்கின்றது....!
அவன் அருகாமை
என்னுள் பல வேதியியல்
மாற்றத்தை ஏற்படுத்துகின்றது....
இருந்தும்
மனம் அதையே எதிர்பார்க்கின்றது....!
நேசம் கொண்ட மனதிற்கு
தெரியவில்லை
இருவரும் வேறுவேறு ஜாதி என்று....
நேசம் கைகூடுமா....
இரு உயிர் ஓருயிராகுமா...
அல்ல
இரு உடலோடு பல உயிர் போகுமா...
தெரியவில்லை...!
நேசம் கொண்ட மனம் ஏங்குகின்றது
இணைவதற்கு....
அச்சம் கொண்ட புத்தி தடுமாறுகின்றது
இது நிறைவேறுமா என்று...!
காதலிப்பது குற்றமா...?
இரு வேறு ஜாதியில் பிறந்தது குற்றமா...?
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்
ஜாதியும் இல்லை என்றால்
நன்றாக இருக்கும்...
பல உயிர் பலியாகாமல்
காதலும் சாகாமல்
வாழும் என்றென்றும்.....!