மலர்கள் மலர
நம் இரு இதழ் இணைந்த வேளையில்
இதழ் விரித்திருக்க கூடும்
இப்பனி நனைந்த ரோஜாக்கள்...
இம்மல்லி மலர்ந்த வேளை
நாம் மையலில் இணைந்த
வேளையாய் இருக்கக் கூடும்...
யாமம் புலர்ந்ததொரு நேரம்
நம் புணர்ந்தெழந்த தேகம்
சோம்பல் முறித்ததொரு வேளையில்
அலர்ந்ததுவோ இவ் ஆம்பல்...
இம்முல்லையில் வீசுகிறது நீ என்
மூச்சுக்காற்றை நுகர்ந்த வாசம்...
சிரித்திருக்கும் தாமரை இதழ்களில்
கார்காலத்தின் தென்றல் வீச
தெளிகிறேன் இது கதிரொளி பட்டு
மலர்ந்த மலரென்று...
ஒருவாறு அள்ளிக் கோர்த்திருக்கிறேன்
நம் நினைவுகளின் நிலவரையில்
மலர்ந்த மலர்களை உன்
இருத்தலின் பொழுதுகளில் பகிர்ந்திட...
வாசல் தொடு...
உயிர் மூடும் திரை எனக்கு
உன் நிழல்...