அடையாளம்

பன்னிரு கைகளென..
கோர நகங்களென..
கோரைப் பற்களென..
கோபம் கொள்கிறது மனம்...
என்னை நானே ஆத்திரத்தின் உச்சியில் ஆழ்த்தி
பின் ஒடிந்து வீழ்கிறேன்...
உங்கள் வெறுப்பின் மீதொரு மேடை அமைத்து
ஆனந்த தாண்டவம் ஒன்றை அரங்கேற்ற
ஆசை எனக்கு...
உங்கள் நம்பிக்கைகள் எனக்கு
நம்பிக்கையற்று போன கணத்தில்...
உங்கள் வெறுப்பையோ..
உங்கள் ஆணவத்தையோ..
மோதி மிதித்துவிடும் துணிவிருக்கிறது எனக்கு...
நீங்கள் பரம்பரை பாரம்பரியம் கௌரவம் கலாச்சாரம் எனும்...
அடையாளம் பூண்டு வருகிறீர்கள்..
எனக்கு நம்பிக்கையில்லா வரலாறு ஒன்றை சொல்கிறீர்கள்...
உங்கள் கட்டுப்பாடுகளை சீர்வரிசையென
என் கையில் திணிக்கின்றீர்கள்...
நம் விருப்பங்கள் எதிரெதிர் துருவங்களாய் நின்றதில்...
என் வயது உங்களுக்கும்
உங்கள் வயது எனக்கும்
பாரமாய் தெரிகிறது..

-வித்யா சிவலிங்கம்

எழுதியவர் : (24-May-18, 2:53 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 55

மேலே