திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி- கருத்துகள்
திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [53]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [17]
- மலர்91 [17]
நன்றன்று= நன்று+ அன்று எவ்வாறெனின், நன்று என்ற நிலைமொழி ஈற்றேழுத்து று என்பது, இதனைப் பிரித்தால் ற்+ உ என்று பிரியும் இங்கு 'உ' என்பது உயிர் எழுத்து. வருமொழி முதல் எழுத்து 'அ 'என்பது இதுவும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே "உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்" (அதாவது, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள 'உ' என்ற குறில் எழுத்து தன்னுடன் இணைன்துள்ள மெய்யெழுத்தை விட்டு மறையும். அந்த அடிப்படையில் 'உ' என்ற எழுத்து மறைந்த நிலையில், நன்ற்+அன்று என்று இருக்கும். அடுத்து "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி நிலைமொழி ஈற்று 'ற்' என்ற எழுதுடன் வருமொழி 'அ' சேர்ந்து ற்+அ=ற என்று ஆகியமையால் நன்றன்று என்று புணர்ந்துள்ளது.
கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும்.
அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல்.
மிக்க நன்றி. தமிழன்னைக்குத் பணி செய்தலை நான் தலையாய கடமையாகக் கருதுகின்றேன். அடுத்தடுத்து பல இலக்கண நூல்களை அதுவும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்குவதில் நான் கழிப்பேருவகை எய்துகின்றேன்.
இது அன்னை கலைவாணி அளித்த வர்ப்பிரசாதம். தொடர்ந்து வெளியிட தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு எனக்கு பெரிதும் மகிழ்வை ஏற்படுத்துகின்றது.
மிக்க நன்றி
அன்புடன்
ஸ்ரீ. விஜயலஷ்மி
எழுது என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, அதற்குக் கீழே வரும் பிரிவுகளில் தாங்கள் எழுதப் போவது கதையா, கவிதையா போன்றவற்றை தேர்வு செய்து அதற்கான தலைப்பினை இடுகை செய்தபின் இறுதியில் அது எந்த பிரிவின் கீழ் வருகிறது (எ.டு. தமிழ் ) பின்னர் தங்கள் பெயர் வரவேண்டிய இடத்தில் பெயரைப் பதிவு செய்துவிட்டு, இறுதியாக நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்னர் சமர்ப்பி என்பதனை பதிவுசெய்தால் தங்கள் கதையோ கவிதையோ பிரசுரிக்கப்படும். வெளியிட வாழ்த்துக்கள்.
அற்புதமான வரிகள். ஆழ்ந்த கருத்துக்கள். வளர்க உமது தமிழ்த் தொண்டு. உமது இக்கவிதையைத்தான் என் அன்பு சகோதரர் ஒருவர் புதுமனை விழா வாழ்த்தாகப் படித்ததில் பிடித்தது என்று அனுப்பியுள்ளேன். அன்புடன் திருமதி ஸ்ரீ. விஜயலக்ஷ்மி
டூ- திருப்பட்டூர், காட்டூர், மேட்டூர், கோட்டூர்.
ணூ - உண்ணூ தந்தான் - உண்பதற்குத் தந்தான். , காணூ சென்றான்.- காண்பதற்குச் சென்றான், எண்ணூ என்றாந் நினை என்றான்.
ளூ- வேளூர்,
ழூ- ஏழூர்,
அற்புதமான சேகரிப்பு. ஆணித்தரமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் ஐயா.
நிச்சயமாக அவள் மன்னிப்பாள். ஆசிகூறுவாள். அரவணைப்பாள். அமுதமழை பொழிவாள். சூட்சும சரீதத்துடன். அதுதான் தாய். ஒவ்வொருவரும் இதைத்தான் செய்கிறோம். பின்னர் வருந்துகிறோம். கண்ணெதிரே தெரிந்த கடவுளைத் தொலைத்துவிட்டோம். கண்ணீரால் அவள் பாதங்களை மனதால் நினைந்த நிணைப்போம்.
மிக்க நன்றி. தங்களின் நல்லாசியும், ஊக்குவிப்புமே, என் போன்றோரை மேன்மேலும் இயக்குகின்றது. செம்மையாய் செயல் புரிய உறுதுணையும் புரிகின்றது. மீண்டும் என் நன்றிகள் பல.
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பசியெடுக்கும் என்பதற்கிணங்க, சிறந்தனவற்றைத் தேடித்தந்த பெருந்தகையே! நீவீர் வாழ்க பல்லாண்டு. வளர்க உம் தமிழ்த்தொண்டு.
மிக்க நன்றி தங்களின் பொன்னான கருத்துகளுக்கு. பைய- என்றால் மெல்ல என்பது பொருள். தமிழ் இலக்கிய வழக்கில் உள்ள சில சொற்கள் தற்கால வழக்கில் இல்லாமல் போனது வருத்தமே. இருப்பினும், இனி வரும் நாட்களில் தாங்கள் மொழிந்தது போன்று, எளிய இனிய சொற்களையே கையாள முயல்கின்றேன்.
தங்களைப் போன்றோரின் அமுதமொழி மூலமே, தற்கால தேவைகளும் புலப்படுகின்றன.
மீண்டும் நன்றி பல. பிழையிருப்பின் பொருத்தருள்க.
அன்புள்ளம் கொண்டவரே, தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். இதோ கீழே சில பதவுரைகள் தங்களின் மேலான கவனத்திற்கு நல்கியுள்ளேன். பிழையிருப்பின் பொருத்தருள்க.
தண்ணளி- குளிர்ந்த அருள், உய்வித்தல்- வாழவைத்தல், கிரணங்கள்- ஒளிக்கதிர்கள், மிடுக்குற்று- பெருமையுற்று, வருடுதல்- தடவுதல், நீலப்பட்டாடை- நீல வண்ணம், ஆர்ப்பரித்தல்- ஆரவாரம் செய்தல்(மிகுதியான சத்தம்),
ஐயா, வணக்கம். நான் இன்று வெளியிட்ட மேற்கூறிய சிறுகதையை முகப்புப் பக்கத்தில் என்னால் படிக்க இயலவில்லை. காரணம் புரியவில்லை. தயவு கூர்ந்து இதனை வெளியிடுமாறு பணிவன்புடன்வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஸ்ரீ. விஜயலக்ஷ்மி
உங்கள் வினா என்ன? சாரற்செழியன் பெயரின் பொருளா? அவ்வாறயின் அதனை முதலில் பிரித்து எழுதினால் சாரல்+ செழியன் என வரும். அதாவது மாமழையானது எவ்வாறு பொழிந்து பூவுலகில் வளமையை ஏற்படுத்துகின்றதோ, பல இன்னுயிர்களை உய்விக்கின்றதோ அதனைப் போன்று மற்றவரை இவர் வாழ வைப்பார் என்ற பொருள் புலப்படும். நன்றி
முதலில் வினாவை தமிழில் எழுதுங்கள்.
புத்துணர்ச்சி= புதுமை + உணர்ச்சி
இந்தக் கட்டுரையை என்னால் முழுமையாகப் படிக்க இயலவில்லை.
அடிக்குமலை- ஏனெனில் நிலைமொழி ஈற்று ம் உடன் வருமொழி முதல் அ சேர்ந்து ம எனத்திரியும்.
இறைவனே உன் தரிசனத்தை நல்கு - என்பது இதன் பொருள்.
'மனிதனின் அவல நிலையும், அது தவிர்ப்பதற்கான இறைவேட்டலும்' என்பதே பாரதியாரின் இந்தக் கவிதைக்கு ஏற்ற சரியான தலைப்பு.
போராட்டக் காரர்கள் மட்டுமல்ல.அனைவரும் ஒருங்கிணைந்து பாரம்பரியமாக ஏற்றமுடன் செயல்படும் இந்து தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, இறைநம்பிக்கையை வீழ்ந்துவிடாமல் காப்பாற்றவேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமையும் கூட. பிறநாட்டவரும் போற்றத்தக்க தமிழர் பண்பாடுகள், சில காலமாக நாகரிகம் என்ற போர்வையால் சீரழிவது மிகவும் வர்ந்தத்தக்கது. தமிழகத்தைக் காப்போம். இறைநம்பிக்கையை வளர்ப்போம். புல்லுருவிகளைக் களைவோம். புதிய பாரதத்தை மலரச் செய்வோம்.