கலைகள்

உள்ளத்துணர்வுகளைத் தெள்ளிதின் வெளிப்படுத்தி
உவகைப் பேரின்பம் நல்கும் ஊற்றுநீர் கலைகள்
பைய நடைபயின்று, பற்பல சுவை நல்கி,
பாங்குடன் மிளிர்வது கலைகள்
பாரெங்கும் மணம் பரப்புவது கலைகள்
தெவிட்டாத இன்பமாய்த் தேமதுரச் சுவையாய்
இன்னிசை விருந்தளிப்பது கலைகள்
சிந்தனை அரும்பாகி, செம்மையாய்ப் பூத்துக்குலுங்கி,
செம்பவள வாய்மொழிவது கலைகள்
வெள்ளிப் பிழம்பெனவே வெள்ளப் பெருக்கெடுத்து
தாவியும் தவழ்ந்தும் தளிர்நடைப் பயின்றும்
எங்கும் பிராகசிப்பது ஆயக்கலைகள் அறுபத்துநான்கே!

அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி,
தமிழாசிரியை,
கோவை 22.

எழுதியவர் : ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி (23-Feb-19, 3:29 pm)
பார்வை : 2185

மேலே