திருக்குறள் கவிதை

திருக்குறள் கவிதை



இதய ஒலிகள் அனைத்தினையும்
ஈரடி தனக்குள் அடக்கிவிட்டு
ஈடு இணையற்ற புகழனைத்தும்
இனிதாய் தனக்கே ஈட்டிக்கொண்ட


சீரினைப் பெற்றது திருக்குறளே
சிந்தை குளிர பல வரிகள்
செம்மைப் பெருக பல வரிகள்
சிறப்பாய் வாழப் பல வரிகள்


எண்ணில் அடங்கா கருத்துக்கள்
ஏற்றம் மிகுந்த சொல்லடைகள்
என்றென்றும் மிளிரும் ஒளிச்சுடராய்
எங்ஙணும் பரவிடும் அதன் கதிர்கள்


சாதிபேதம் எதுவுமின்றி
சமத்துவமாக விளங்கிநின்று
சர்வமயமாய் விளங்கி என்றும்
சாதனை புரியும் திருக்குறளே!


வார்த்தைகள் இல்லை வருணிக்க
வாழ்த்தொலி போதா எடுத்தியம்ப
வையகம் எங்ஙணும் செருக்குடனே
வட்டமிடுது திருக்குறளே!


நித்தம் வாழ்வில் பின்பற்ற
எத்தனை எத்தனை சொற்கோர்வை
பற்றித் தொடர்வோம் பாங்குடனே
பற்பல நலன்கள் பெற்றிடவே




முத்து முத்தான சொத்ததனில்
பத்துப் பத்தாய் பிரிவுகளாம்
கற்றுக் கற்று தினம் உய்வோம்
காலம் முழுதும் கடைபிடிப்போம்


வாழ்த்துவோம் அதனின் பெருமை தனை
ஏத்துவோம் அதனை மனதிருத்தி
என்றென்றும் பல்லறம் பெற்றிடுவோம்
ஏற்றம் பெற்று உயர்ந்திடுவோம்




வாழ்க குறள் வெண்பா!
ஓங்குக அதன் பெரும்புகழ் என்றென்றும் !!
ஒழுகுக வையகம் அதன் நெறியில்!!!
உய்க செந்நெறியில் நாளும் நாளும்!!!!





அன்புடன்,
திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி,
தமிழாசிரியை,
கோயம்புத்தூர் 22.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி, (8-Nov-19, 2:47 pm)
Tanglish : thirukural kavithai
பார்வை : 1195

மேலே