கிழிந்த காகிதத்தில் கிறுக்கினாலும் கவிதைதான்

சாலையில் கிடக்கும்
கிழிந்த காகிதத்தில் கிறுக்கினாலும்
கவிதைதான்
கணினியின் தட்டச்சில் சொடுக்கினாலும்
கவிதைதான்
வண்ண வண்ண பக்கங்களில்
புத்தகத்தில் அச்சடித்தாலும் கவிதைதான்
எதை எழுதினாலும்
எல்லோர் நெஞ்சிலும் எழுதப்படுவதுதான்
உண்மையான கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-19, 4:58 pm)
பார்வை : 85

மேலே